search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீக்கிய குரு கோபிந்த் சிங்"

    சீக்கிய குரு கோபிந்த் சிங் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவாக புதிய நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.#SikhGuruGobindSingh #PMModi
    புதுடெல்லி:

    சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ் மறைவுக்கு பின்னர் பலர் அம்மதத்தில் குருமார்களாக இருந்து சீக்கியர்களை வழிநடத்தி வந்தனர். இவ்வகையில் 10-வது சீக்கிய குருவான கோபிந்த் சிங் 1708-ம் ஆண்டில் மறைந்தார். இவரது  பிறந்தநாளை கொண்டாடும் வகையில்  நினைவு நாணயத்தை பிரதமர் மோடி நாளை வெளியிடவுள்ளார்.

    இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி, அவரது இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், குரு கோபிந்த் சிங் நினைவு நாணயத்தை வெளியிட்டு உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலர் மட்டுமே இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. 



    கடந்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி பாட்னாவில் நடைபெற்ற குரு கோபிந்த் சிங்கின் 350-வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது குரு கோபிந்த் சிங் நினைவு தபால் தலையினை வெளியிட்டார். விழாவில் பேசிய அவர், கல்சா பிரிவின் வாயிலாக குரு கோபிந்த் சிங், நாட்டை ஒருங்கிணைக்க மேற்கொண்ட தனித்துவமான முயற்சியை சுட்டிக் காட்டியது குறிப்பிடத்தக்கது. #SikhGuruGobindSingh #PMModi

    ×